Friday, December 28, 2012

என்ன வரம் கேட்க !

கடவுள் நேரில் வந்தால் என்ன கேட்பாய் 
என்றாள் என் மனைவி !

என்ன கேட்க !

"ஆளை விடு. போதும்  என்பேன்.

இல்லை இல்லை! 

புரிந்துகொள்ளும் மனைவி வேண்டும், கீழ்படியும் பிள்ளைகள் வேண்டும்,
தோள்கொடுக்க நண்பன் வேண்டும், 

இல்லை இல்லை!

சொந்த வீடு வேண்டும், சின்னதாய் ஒரு கார் வேண்டும், 
கடன் இல்லாத வாழ்க்கை வேண்டும், 

இல்லை இல்லை!

ஏழைகளுக்கு இறங்கும் மனங்கள் வேண்டும்,
ஏற்றத்தாழ்வு  இல்லா சமுதாயம் வேண்டும்,
ஏமாற்றாத உறவுகள் வேண்டும்,
ஏமாறாத விழிப்புணர்வு வேண்டும்,

பெண்களை சமமாக மதிக்கும் புத்திகூர்மை வேண்டும்,
பெண் சிசுக்களை காக்கும் தைரியம் வேண்டும்,
வயதில் மூத்தவர்களை பாதுகாக்கும் இளைஞர்கள் வேண்டும்,
முதியோர் இல்லங்களை மூடிவிடும் சிந்தனை  வேண்டும்,

 இல்லை இல்லை,

இதையெல்லாம் செய்துகாட்டும் கடவுள்தான் வேண்டும்
வேண்டும் வேண்டும் கடவுள்தான் வேண்டும்!!

மனிதாபிமானமுள்ள கடவுள் வேண்டும்
உயிருள்ள கடவுள் வேண்டும்
உழைக்கும் மக்களை உயர்த்திவிட கடவுள் வேண்டும்
உணர்ச்சியுள்ள கடவுள் வேண்டும்

வேண்டும் வேண்டும் கடவுள்தான் வேண்டும்!!!