Friday, December 28, 2012

என்ன வரம் கேட்க !

கடவுள் நேரில் வந்தால் என்ன கேட்பாய் 
என்றாள் என் மனைவி !

என்ன கேட்க !

"ஆளை விடு. போதும்  என்பேன்.

இல்லை இல்லை! 

புரிந்துகொள்ளும் மனைவி வேண்டும், கீழ்படியும் பிள்ளைகள் வேண்டும்,
தோள்கொடுக்க நண்பன் வேண்டும், 

இல்லை இல்லை!

சொந்த வீடு வேண்டும், சின்னதாய் ஒரு கார் வேண்டும், 
கடன் இல்லாத வாழ்க்கை வேண்டும், 

இல்லை இல்லை!

ஏழைகளுக்கு இறங்கும் மனங்கள் வேண்டும்,
ஏற்றத்தாழ்வு  இல்லா சமுதாயம் வேண்டும்,
ஏமாற்றாத உறவுகள் வேண்டும்,
ஏமாறாத விழிப்புணர்வு வேண்டும்,

பெண்களை சமமாக மதிக்கும் புத்திகூர்மை வேண்டும்,
பெண் சிசுக்களை காக்கும் தைரியம் வேண்டும்,
வயதில் மூத்தவர்களை பாதுகாக்கும் இளைஞர்கள் வேண்டும்,
முதியோர் இல்லங்களை மூடிவிடும் சிந்தனை  வேண்டும்,

 இல்லை இல்லை,

இதையெல்லாம் செய்துகாட்டும் கடவுள்தான் வேண்டும்
வேண்டும் வேண்டும் கடவுள்தான் வேண்டும்!!

மனிதாபிமானமுள்ள கடவுள் வேண்டும்
உயிருள்ள கடவுள் வேண்டும்
உழைக்கும் மக்களை உயர்த்திவிட கடவுள் வேண்டும்
உணர்ச்சியுள்ள கடவுள் வேண்டும்

வேண்டும் வேண்டும் கடவுள்தான் வேண்டும்!!!








Friday, January 28, 2011

அவமானப் படுகிறேன் !

அறிவிப்புகள் அவசியம்தான் ஆனால்
நம் தெருக்களில் அலுவலகங்களில் பொது இடங்களில்
நான் தினம் காணும் சில அறிவிப்புகள் என்னை
ஆத்திரமூடுகின்றன! இல்லை அவமானப்படுதுகின்றன!

"இங்கு எச்சில் துப்பாதீர்கள்",
"இங்கு சிறுநீர் கழிக்காதீர்கள்"
"இங்கு சிகரெட் புகைப்பது குற்றமாகும்"
"குப்பைகளைத் தொட்டியில் போடவும்" 
"பூக்களைப் பறிக்காதீர்கள்"
"புல்மீது நடக்காதீர்கள்"
"மருத்துவமனைப் பகுதி - சப்தம் செய்யாதீர்கள்"
"பள்ளிப்பகுதி - வாகனங்களை வேகமாக இயக்காதீர்"
"பொது சொத்துக்களை சேதப்படுத்தாதீர்"
"செல்போன் பேசிக்கொண்டு வண்டி ஓட்டாதே"
"சாலை விதிகளைக் கடைபிடி"

உலகின் வேகமாக முன்னேறும் நாடுகளில் இந்தியா முதலிடம்
அவமானப்படாமல் என்ன செய்ய !!

Saturday, November 6, 2010

இழப்பு !

கட்டிலோடு கயிறாய் ஒட்டிக்கிடக்கும் ஒரு உருவம்
ஆணா பெண்ணா என்று உணர முடியாத தோற்றம்
அருகில் இருப்பவர் யார் என்று அறிய முடியாத மயக்கம்
அம்மா அம்மா என்றழைக்கும் மகனின் குரல் !
நினைவோடு  இருக்கும்போது வரலையே நீ
என்று அங்கலாய்க்கும் தங்கையின் அழுகுரல்!
என்ன செய்வதென்று அதிர்ந்து நிற்கும் உறவினர்! 

தொப்புள்கொடி பந்தத்தில் ஓர் இடைவெளி !
எதை இழந்தோம் நாம்? எதை இழந்தோம்
கடவுள்கள் விற்பனைக்கு !


ரயில்வே ஸ்டேஷன் போகும்போது . . . .

பஸ் ஸ்டாப்பில் நிற்கும்போது. . . .

நீங்கள் தினம் காணும் கடவுள்கள் நாங்கள்! 


வெள்ளை நிறத்தில்  உருவானோம் நேற்று 

வண்ணமாய் பாதைஓரம்  நிற்கின்றோம் இன்று.

கடவுள்கள் விற்பனைக்கு !


எங்களைப் படைத்த பிரம்மாக்களின்

பசியைப் போக்கமுடியாத

மானத்தை மறைக்கமுடியாத

வறுமையை ஒழிக்கமுடியாத

பரிதாபக் கடவுள்கள் நாங்கள் !


எங்களை வாங்கி உங்கள் வீடுகளைப் புனிதப்படுத்தி 

எங்களைப் படைத்தவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட

 உங்களைப் பிரார்த்திக்கும் தெருஒரக் கடவுள்கள் நாங்கள் !

கடவுள்கள் விற்பனைக்கு!

Thursday, October 28, 2010

A dream come true!

Jothsna made it happen. 

That was a thought lingering in my mind for years. 
Finally 
in the comfort of the cool coach 
on the way to Kovai 
at the end of 
a tiring but satisfied day - 
gk's immortal thoughts born afresh.